மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட்டை 3-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தான்தான் மான்செஸ்டர் நகரின் தற்போதைய ஜாம்பவான் என சிட்டி மார்தட்டி வருகிறது. ஆட்டத்தில் 12வது நிமிடத் தில் டாவிட் சில்வா கோல் போட்டு சிட்டியை முன்னி லைக்குக் கொண்டு சென்றார். பிற்பாதி ஆட்டம் தொடங்கி மூன்று நிமிடங்களில் சிட்டி அதன் இரண்டாவது கோலைப் போட்டது. செர்ஜியோ அகுவேரோ அனுப்பிய பந்து கண்ணிமைக்கும் நேரத்தில் வலையைத் தொட்டது. பத்து நிமிடங்கள் கழித்து யுனைடெட்டுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை மார்ஷியால் நழுவவிடவில்லை. கோல் போட்ட பிறகு ஆட்டத்தைச் சமன் செய்யும் முனைப்புடன் யுனைடெட் இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் சிட்டி வெற்றியை உறுதி செய்தது.
உச்சத்தில் மேன்சிட்டி; வீழ்ந்தது மேன்யூ
1 mins read
-

