இங்கிலாந்துக்கு பிரியாவிடை; வெயின் ரூனி நெகிழ்ச்சி

இங்கிலாந்துக்கு பிரியாவிடை; வெயின் ரூனி நெகிழ்ச்சி

2 mins read

வா‌ஷிங்டன்: இங்கிலாந்து காற் பந்துக் குழுவிற்காக தாம் இறுதி யாக விளையாடவுள்ள ஆட்டத்தை எண்ணி தாம் பெருமை கொள் வதாக முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திர ஆட்டக்காரர் வெயின் ரூனி தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவின் எம்எல்எஸ் லீக்கில் டிசி யுனைடெட் குழுவிற்காக விளையாடிவரும் அவர், நேற்று முன்தினம் டுவிட் டரில் காணொளி ஒன்றை வெளியி ட்டார். இங்கிலாந்துக்காக தமது 120வது ஆட்டத்தில் விளையாடுவதை எண்ணி உற்சாகம் அடைவ தாக அவர் கூறினார். வெம்பிளி விளையாட்டரங்கில் அமெரிக்காவுடன் நாளை நட்பு முறை ஆட்டம் ஒன்றில் இங்கிலா ந்து பொருதுகிறது.

"இந்த ஆட்டத்தில் விளையாட குழுவில் இடம்பெறுவது, பழைய ஆட்டக்காரர்களையும் பயிற்றுவிப் பாளரையும் சந்திப்பது, வெம்பிளி யில் கடைசி முறையாக விளையாடுவது என்பது ஒரு சிறந்த தருணமாக அமையும்," என்று ரூனி உணர்வுபூர்வமாகக் கூறி னார். "அத்துடன், ரசிகர் பெருமக் களையும் சந்தித்து, அவர்கள் முன்னிலையில் இங்கிலாந்து சீரு டையை அணிவது நெகிழ்வு தரக் கூடிய ஓர் அனுபவம். இவ்வளவு காலம் இங்கிலாந்து குழுவிற்காக விளையாடி வந்த எனக்கு ரசி கர்கள் தந்த பேராதரவிற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்," என்றும் அவர் சொன்னார். அமெரிக்காவின் எம்எல்எஸ் லீக்கில் இவ்வாண்டு ஜூலை மாதத்தில் விளையாடத் தொடங் கிய ரூனி, லீக்கில் கீழ் நிலையில் இருந்த டிசி யுனைடெட் குழுவைத் தமது சிறந்த விளையாட்டின் மூலம் கைதூக்கிவிட்டார். இங்கிலாந்துக்கு ரூனி அளித்த பங்களிப்புக்காக இங்கிலாந்தின் காற்பந்துச் சங்கம் நன்றி தெரி விக்கும் இயக்கத்தைத் தொடங்கியது.