முனைப்பில் இங்கிலாந்து காலி: இலங்கை-இங்கி லாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று காலியில் தொடங்கு கிறது. தொடரைக் கைப் பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து கள மிறங்குகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3=1 என்ற கணக்கில் கைப் பற்றியது. இதேபோல ஒரே ஒரு டி20 ஆட்டத்திலும் அந்த அணியே வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கொழும்பில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் இங்கி லாந்து 211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. எதிர்வரும் டெஸ்ட் போட்டி யையும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் இங்கிலாந்து இருக்கிறது. இலங்கை அணி பதிலடி கொடுத்து சமன் செய்யும் வேட்கையில் உள்ளது. அதன் அணித் தலைவர் சன்டிமால் காயத்தால் இந்த ஆட்டத்தில் கள மிறங்க மாட்டார் எனக் கூறப்ப டுகிறது.
2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: வெற்றி பெறும்
1 mins read

