டென்னிஸ்: இஸ்னெரை வீழ்த்தினார் ஜோக்கோவிச் லண்டன்: ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி ஒன்றில் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நோவாக் ஜோக்கோவிச், வெற்றி பெற்றார். முன்னணி எட்டு வீரர்களுக்கு இடை யிலான இந்த டென்னிஸ் தொடர் பிரிட்டிஷ் தலைநகர் லண் டனில் நடைபெற்று வருகி றது. தொடக்க ஆட்டத்தில் அமெ ரிக்க ரான ஜான் இஸ்னெரை 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் ஜோக்கோவிச் எளி தில் தோற் கடித்தார். இதே பிரிவில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் அலெக் சாண்டர் ஸ்வெரேவ், மரின் சிலிச் ஆகியோர் பலப்பரிட்சை நடத்தினர். இதில் இரண்டு செட்டுகளும் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இறுதியில் 7(7)-7(6), 7(7)-7(1) என அலெக்சாண்டர் கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றார்.
ஏடிபி ஃபைனல்ஸ்
1 mins read

