சிட்னி: ஆஸ்திரேலியா சென் றுள்ள இந்திய அணி 20 ஓவர் தொடரை சமன் செய்யத் தயாராகி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டித் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ஓட்டத்தில் வெற்றி பெற்றது. மெல்பர்னில் நேற்று முன் தினம் நடந்த 2வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட் டது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெறுகிறது. கடைசி போட்டியில் வென்று தொடரைச் சமன் செய்யும் வேட்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர். இன்றைய போட்டிக்கான அணியில் கோஹ்லி எந்தவித மாற்றமும் செய்யமாட்டார் என்றே தெரிகிறது. அதே சமயம் முதல் போட் டியைப் போலவே சிட்னி ஆட்டத்திலும் வென்று ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கி றது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமன் செய்ய தயாராகும் இந்தியா
1 mins read

