காற்பந்து விளையாட்டில் ஐரோப்பாவின் சாம்பியன்ஸ் லீக்கிற்கு நிகரானது தென்னமெரிக்காவின் 'கோப்பா லிபெர்ட்டடோர்ஸ்' எனும் 'விடுதலையாளர்கள் கிண்ணம்'. அத்தகு புகழ்பெற்ற காற்பந்துத் தொடருக்கு இன்று தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் வன்முறை காரணமாக அத்தொடரின் இறுதிப் போட்டியின் 2வது சுற்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பியூனஸ் அய்ரிஸ் நகரில் அர்ஜெண்டினாவின் போக்கா ஜூனியர்ஸ் - ரிவர் பிளேட் குழுக்களுக்கு இடையிலான அந்த ஆட்டத்தை நேற்று முன்தினம் இரவு இருமுறை தொடங்க முயன்றும் முடியாமல் போனது. போக்கா ஜூனியர்ஸ் குழுவினர் வந்த பேருந்து மீது ரசிகர்கள் கல்வீச்சு நடத்த, கோன்சாலோ ரமர்டோ (இடப்படம்) உள்ளிட்ட சில வீரர்கள் காயமடைந்தனர். போலிசார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி ரசிகர்களைக் கலைத்தனர். வன்முறையில் ஈடுபட்ட ரிவர் பிளேட் குழுவின் ரசிகர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். படங்கள்: ஏஎஃப்பி

