டோனி குடும்பத்தில் குடியேறிய தமிழ்மொழி

டோனி குடும்பத்தில் குடியேறிய தமிழ்மொழி

1 mins read

ராஞ்சி: பிறந்த மாநிலமான ஜார்க்கண்டுக்கு அடுத்தபடியாக சென்னையைத் தமது சொந்த ஊர் போல பாவித்து வருகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி. ஐபிஎல் எனும் இந்திய பிரிமியர் லீக் தொடரில் தொடக்கம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருவதே இதற்குக் காரணம்.

இந்நிலையில், தமிழ்மொழியைக் கற்று தமிழ்நாட்டுடன் இன்னும் நெருக்கமாகியுள்ளார் டோனி. மகள் ஸிவாவுடன் போஜ்புரி மொழியிலும் தமிழ்மொழியிலும் உரையாடும் காணொளியைத் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். "எப்படி இருக்கீங்க?" என்று கொஞ்சும் தமிழில் ஸிவா கேட் பதும் அதற்கு "நல்லா இருக்கேன்," என்று டோனி பதில் அளிப்பதும் அதில் இடம்பெற்றுள்ளது. அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்ட டோனி, தம் குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறார்.