செல்சிக்கு முதல் தோல்வியைப் பரிசளித்த ஸ்பர்ஸ்

செல்சிக்கு முதல் தோல்வியைப் பரிசளித்த ஸ்பர்ஸ்

1 mins read
0413141c-bf17-432d-8293-7990c7a9be62
-

லண்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்துள்ளது செல்சி காற்பந்துக் குழு. வெம்பிளி விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் பின்னிரவு நடந்த ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு 3=1 என்ற கோல் கணக்கில் செல்சியை வெற்றிகொண்டது. இதன்மூலம் பட்டியலிலும் செல்சியை நான்காம் இடத்திற்குத் தள்ளி, மூன்றா மிடத்திற்குத் தாவியது ஸ்பர்ஸ் குழு. ஆட்டத்தின் 16வது நிமிடத்திலேயே 2=0 என முன்னிலைக்குச் சென்றது அக்குழு. எட்டாவது நிமிடத்தில் கிறிஸ் டியன் எரிக்சன் அனுப்பிய பந்தை டெலி அலி தலையால் முட்டி வலைக் குள் தள்ளினார்.

எட்டு நிமிடங்களுக் குப் பின் சற்று தூரத்தில் இருந்து துல்லியமாகப் பந்தை வலைக்குள் உதைத்தார் ஸபர்சின் நட்சத்திர இங்கி லாந்து ஆட்டக்காரர் ஹேரி கேன். இரண்டாம் பாதியில் கொரிய வீரர் சன் ஹியூங் மின் தன் பங்கிற்கு ஒரு கோலைப் போட்டார். ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் இருந்தபோது ஒலிவியே ஜிரூ அடித்த கோல் செல்சிக்கு ஆறுதலை மட்டுமே அளிக்க முடிந்தது.

எட்டாவது நிமிடத்திலேயே கோலடித்து ஸ்பர்ஸ் குழுவிற்கு முன்னிலை பெற்றுத் தந்த டெலி அலி (இடமிருந்து 2வது). படம்: ராய்ட்டர்ஸ்