4ஆம் முறையாக கிண்ணம் வென்ற ஆஸ்திரேலியா

4ஆம் முறையாக கிண்ணம் வென்ற ஆஸ்திரேலியா

1 mins read

ஆன்டிகுவா: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி டி20 உலகக் கிண்ணத்தை நான்காவது முறையாகக் கைப்பற்றியது. முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணியில் டேனியலா வயட் (43), அணித் தலைவர் ஹெதர் நைட் (25) ஆகிய இருவரைத் தவிர மற்ற எவரும் இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை. இதனால் அந்த அணி இரண்டு பந்துகள் எஞ்சியிருந்தபோதும் 105 ஓட்டங்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து பந்தடித்த ஆஸ்திரேலிய அணி 15.1 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி, கிண்ணம் வென்றது. மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைக் குவித்த ஆஷ்லி கார்ட்னர் ஆட்ட நாயகியாகத் தேர்வு பெற்றார்.