அபுதாபி: ஐந்தாவது முறையாக ஒட்டுமொத்த வெற்றியாளர் பட் டத்தை ஏற்கெனவே உறுதிசெய்த நிலையில், இவ்வாண்டின் கடைசி ஃபார்முலா1 கார் பந்தயமான அபுதாபி கிராண்ட் பிரீயையும் வெற்றியுடன் முடித்தார் 'மெர் சிடிஸ்' குழுவின் பிரிட்டிஷ் வீரர் லூவிஸ் ஹேமில்டன் (படம்). இந்த ஆண்டில் ஹேமில்டன் வென்ற 11வது பந்தயம் இது. வெற்றிக் கோட்டைத் தாண்டி யதும் ஹேமில்டனும் முன்னாள் வெற்றியாளரான 'ஃபெராரி' குழு வின் செபாஸ்டியன் வெட்டலும் இருந்த இடத்தில் இருந்தபடியே தங்களது கார்களில் வட்டமடித் தனர். அபுதாபி பந்தயத்துடன் விடைபெற்ற இருமுறை உலக வெற்றியாளர் ஃபெர்னாண்டோ அலோன்சோவுக்கு மரி யாதை செய்யும் வகையில் அவர்கள் இப்படிச் சாகசம் புரிந்தனர்.
இந்தப் பந்தயத்தில் வெட்டல், வெர்ஸ்டாப்பன், ரிக்கார்டோ ஆகியோர் முறையே 2ஆம், 3ஆம், 4ஆம் இடங்களைப் பிடித் தனர். அலோன்சோ 11வதாக வந்தார். இதுவே ஃபெராரி சார்பில் கிமி ராய்க்கொனன் பங்கேற்ற கடைசிப் பந்தயம் என்பது குறிப்பிடத்தக்கது.

