உலகக் கிண்ண ஹாக்கி இன்று தொடக்கம்

உலகக் கிண்ண ஹாக்கி இன்று தொடக்கம்

2 mins read

வனேஸ்வர்: உலகக் கிண்ண ஹாக்கி போட்டிகள் இந்தியாவின் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இன்று தொடங்கி, அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. பிரிவுக்கு நான்கு அணிகள் என மொத்தம் 16 அணிகள் நான்கு பிரிவுகளாகப் போட்டியிட உள்ளன. தென்னாப்பிரிக்கா, பெல் ஜியம், கனடா ஆகிய அணிகளு டன் 'சி' பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் பெல்ஜியமும் கனடா வும் மோதுகின்றன. இரவு 9.30 மணிக்கு நடைபெறவுள்ள இன் னோர் ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்காவுடன் பலப் பரிட்சை நடத்தவுள்ளது. கோலாலம்பூரில் 1975ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் வெற்றியாளர் பட்டம் வென்றது இந்திய அணி. அதன் பின் நடந்த போட்டிகளில் இந்திய அணியால் ஒருமுறையேனும் நான்காமிடத்தைக்கூட பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், சொந்த மண்ணில் மூன்றாம் முறையாக நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளில் வென்று சாதிக்கும் முனைப்புடன் மன்பிரீத் சிங் தலை மையிலான இந்திய அணி களம் காண்கிறது. அடுத்த மாதம் 2ஆம் தேதி பெல்ஜியத்துடனும் எட்டாம் தேதி கனடாவுடனும் இந்தியா பொருத உள்ளது. பிரிவுச் சுற்றின் மூன்று ஆட்டங்களிலும் வெல்லும் பட்சத் தில் இந்திய அணி நேரடியாக காலிறுதிக்குத் தகுதிபெறும். மாறாக, இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடிக்க நேர்ந்தால் 'கிராஸ் ஓவர்' எனும் புதிய முறைப் படி 'டி' பிரிவில் இரண்டு அல்லது மூன்றாம் இடத்தைப் பிடித்த அணியுடன் மோத வேண்டியிருக் கும். அதில் வெல்லும் அணி காலிறுதிக்கு முன்னேறும்.