மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட், சுவிட்சர்லாந்தின் யங் பாய்ஸ் குழுக்களுக்கு இடையே நேற்று அதிகாலை நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டத்தில் கடும் போராட்டத் திற்குப் பிறகு யுனைடெட் 1=0 எனும் கோல் கணக்கில் வென்றது. யுனைடெட்டின் சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதிக் கட்டமான 91வது நிமிடத்தில் யுனைடெட்டின் பெல்ஜிய மத்தியத்திடல் ஆட்டக் காரர் மருவான் ஃபெலைனி உதைத்த பந்து எதிரணியின் வலைக்குள் புகுந்தது. யுனைடெட் 'கடைசி 16' சுற்றுக்குத் தகுதி பெற இந்த ஆட்டத்தின் வெற்றி வகை செய்தது. ஆட்டத்தில் ஃபெலை னியின் கோல் வரும் வரை, நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பரு வத்தில் அக்குழு எதிர்நோக்கும் சவால் சாம்பியன்ஸ் லீக்கிலும் தொடர்வதுபோல் தெரிந்தது. இபிஎல்லில் தனக்கு ஏற்பட்டு உள்ள பின்னடைவைப் பின் னுக்குத் தள்ளி, சாம்பியன்ஸ் லீக்கிலாவது சாதனை படைக்க வேண்டும் என்ற வேட்கையுடன் காணப்பட்ட யுனைடெட், இந்த ஆட்டத்தின் பெரும்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியது.
' ஓல்ட் டிராஃபட்' அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் ஃபெலைனி உதைத்த பந்து கோலானது. படம்: ஏஎஃப்பி

