ரசிகர்கள், போலிசாருக்கு இடையே வெடித்த வன்முறை

ரசிகர்கள், போலிசாருக்கு இடையே வெடித்த வன்முறை

1 mins read
63b3d7ba-74b7-4725-a47e-52b7576a2d07
-

ஏதென்ஸ்: கிரீஸின் ஏஇகே ஏதென்ஸ், நெதர்லாந்தின் அயக்ஸ் காற்பந்துக் குழுக்கள் இடையே நேற்று ஏதென்ஸ் நகரில் சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் தொடங்குவதற்கு முன் அரங்கில் எதிர்பாராத விதமாக வன்முறை வெடித்தது. ஆட்டத்தைக் காண வந்த அயக்ஸ் குழு ரசிகர்கள் மீது ஏஇகே ஏதென்ஸ் ரசிகர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியதைச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் காட்டின. அத்துடன், ஆயுதங்கள் ஏந்திய போலிசார் சிலர் அயக்ஸ் ரசிகர்களைத் தாக்கு வதைக் காட்டும் புகைப்படங்க ளும் வலம் வந்தன. அதில் ரசிகர்கள் சிலர் ரத்தக் கறையில் காணப் பட்டனர்.

ஒரு கட்டத்தில் அயக்ஸ் தற்காப்பு ஆட்டக்காரர் ஒருவர் தமது ரசிகர்களிடம் சென்று அவர்களை அமைதிப்படுத்த முற்ப ட்டார். இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே எதனால் இந்த வன்முறை வெடித்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தப் பிரச்சினை ஒரு புறம் இருக்க, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் 68, 72 நிமிடங்களில் அயக்ஸ் ஆட்டக்காரர் டுசான் தாடிச் அடித்த கோல்கள் மூலம் ஏஇகே ஏதென்ஸ் குழுவை அயக்ஸ் 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.