மேரி கோம்: தங்கமே இலக்கு

மேரி கோம்: தங்கமே இலக்கு

1 mins read

புதுடெல்லி: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தம்முடைய அடுத்த இலக்கு என்று இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். 35 வயது கோம் அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் 'லைட் பிளைவெயிட்' பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம் உலக வெற்றி யாளர் போட்டியில் 7 பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். இந்நிலையில், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தமது இலக்கு என்று மூன்று குழந்தைகளுக்குத் தாயான மேரி கோம் கூறியுள்ளார்.