ஆப்பிரிக்கக் கிண்ணப் போட்டி: உரிமையை இழந்த கெமரூன்

ஆப்பிரிக்கக் கிண்ணப் போட்டி: உரிமையை இழந்த கெமரூன்

1 mins read

அக்ரா: 2019ஆம் ஆண்டின் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையிலான காற்பந்துப் போட்டியை கெமரூன் ஏற்று நடத்துவதாக இருந்தது. இந்நிலையில், கெமரூனுக்கு வழங் கப்பட்ட அந்த உரிமை பறிக்கப் பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அந்தப் போட்டிக்குத் தேவையான ஏற்பாடுகளை கெமரூன் இன்னும் நிறைவேற்றவில்லை என்று ஆப்பிரிக்கக் காற்பந்துச் சம்மேளனம் குறை கூறியுள்ளது. இதன் காரணமாகப் போட்டியை ஏற்று நடத்தும் வாய்ப்பை கெமரூன் இழந்துள்ளது. "போட்டியை ஏற்று நடத்தும் உரிமையை கெமரூனிடமிருந்து பறிக்க நாங்கள் முடிவு எடுத்துள்ளோம்," என்று சம்மேளனத்தின் தலைவர் திரு அகமது அகமது செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆப்பிரிக்கக் கிண்ண காற்பந்துப் போட்டியை கெமரூனுக்குப் பதிலாக தென்னாப்பிரிக்கா அல்லது மொரோக்கோ ஏற்று நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.