சிங்கப்பூர்: பிலிப்பீன்ஸ் காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பா ளராக முன்னாள் இங்கிலாந்து நிர்வாகி சுவென் கொரன் எரிக்சன் நியமிக்கப்பட்டிருப்பது ஆசியான் காற்பந்து ரசிகர்களின் கவனத் தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இருந்தாலும், 'லயன்ஸ்' குழு வின் இடைக்காலப் பயிற்றுவிப்பாள ராகத் திகழ்ந்த ஃபாண்டி அகமதின் இடத்தை நிரப்ப முற்படும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம், அடுத்த பயிற்றுவிப்பா ளரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமா கச் செயல் பட முடிவெடுத்து உள்ளது.
தேர்வுப் பட்டி யலில் தற் போது 10 பேர் இடம் பெற்றிருந்தா லும் அதில் பிரபலங் களின் பெயர் எதுவும் இடம்பெற வில்லை என அறியப்படுகிறது. இளம் வீரர்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தக்கூடிய, கடின மான ஆட்டங்களுக்கு ஈடுகொடுக்கு ம் ஆட்டக்காரர்களை உருவாக்க க்கூடிய தகுந்த பயிற்றுவிப்பாள ரைத் தேடுவதில் காற்பந்துச் சங்கம் முனைப்பு காட்டி வருவதாக அதன் தலைவர் லிம் கியன் தோங் தெரிவித்தார். தேர்வு செய்யப்பட்டுள்ள அனு பவமுள்ள பயிற்றுவிப் பாளர்களில் தென்னாப்பிரிக்க, பிரேசிலிய, அமெரிக்க நாட்ட வர்கள் அடங் குவர் என அறியப்படுவ தாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி தழ் செய்தி வெளி யிட்டது.

