செல்சியை உசுப்பிவிடும் நிர்வாகி

செல்சியை உசுப்பிவிடும் நிர்வாகி

1 mins read
de494040-bb45-4760-8eba-98cf8d922cbf
-

லண்டன்: இரண்டு வாரங்களில் செல்சி காற்பந்துக் குழுவின் மீது வைத்த நம்பிக்கை உல்வ்ஸ் குழுவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தகர்ந்துள்ளது. சிங்கப்பூர் நேரப்படி கடந்த வியாழனன்று செல்சி உல்வ்ஸ் குழுவிடம் 1=2 எனத் தோல்வி கண்டது. அதற்கு முன் அது தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வென்ற சாதனையையும் அதனால் பிரிமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டியின் முன்னணி நிலைக்கு இன்னமும் போட்டியாக விளங்க லாம் என்ற செல்சியின் எதிர்பார்ப்பை இந்தத் தோல்வி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

நாளை மான்செஸ்டர் சிட்டி யுடன் செல்சி மோதவுள்ள நிலை யில் சிட்டி குழுவுக்கும் செல்சிக்கு மான புள்ளிகள் வித்தியாசம் 10ஆக உள்ளது. உல்வ்ஸ் குழுவிடம் செல்சி தோற்பதற்கு முதல் நாள் வாட்ஃபர்ட் குழுவை மான் செஸ்டர் சிட்டி வென்றது குறிப்பிடத்தக்கது. உல்வ்ஸ் குழுவிடம் தமது அணி தோற்றதற்கு செல்சி நிர்வாகி சாரி தமது விளையாட்டாளர்கள் ஆட்டத்தின் 90 நிமிடங்களில் 55 நிமிடங்கள்தான் விளையாடினர் என சப்பைக் கட்டு கட்டுகிறார்.