வெற்றியை நோக்கி இந்திய அணி: விரக்தியில் ஆஸ்திரேலியா

1 mins read
90bb8ce3-1eec-4ab9-b6fb-bdab38a763f0
-

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண் டாவது இன்னிங்சில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் 3ம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 151 ஓட்டங்கள் எடுத்துள்ளது. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்தது இந்தியா. புஜாரா (123) சதத்தால் இந்திய அணி 250 ஓட்டங்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர். டிராவிஸ் ஹெட் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 72 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி 235 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டா னது. இந்தியா தரப்பில் அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடிலெய்டில் மூன்றாவது நாள் ஆட்டமான நேற்றைய போட்டியில் பந்தடிக்கும் சதீஸ்வர் புஜரா (நடுவில்). படம்: ஏஎஃப்பி