காணொளியை ஆராயும் லண்டன் போலிஸ்

காணொளியை ஆராயும் லண்டன் போலிஸ்

1 mins read
6ce79f9f-e2ec-49e8-858b-65bad585fb00
-

லண்டன்: மான்செஸ்டர் சிட்டி முன்னணி வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் மீது இனவாத துன்புறுத்தல் தொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை லண்டன் பெருநகர போலி சாரும் செல்சி நிர்வாக அதிகாரி களும் விசாரித்து வருகின்றனர். லண்டனின் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை பின்னிரவு நடை பெற்ற செல்சிக்கு எதிரான ஆட் டத்தைக் காண வந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் தகாத வார்த்தை களைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

கோல் கம்பத்தின் பின்னால் சென்ற பந்தை எடுக்கச் சென்ற அந்த 24 வயது வீரரைப் பார்த்து அந்த அடையாளம் தெரியாத நபர் கூச்சல் போடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.