செல்சி: இவ்வாண்டின் ஏப்ரல் மாதம் முதல் எந்த ஒரு தோல்வியையும் சந்திக்காமல் வெற்றிநடை போட்டு வந்த மான்செஸ்டர் சிட்டி நேற்று பின்னிரவு நடைபெற்ற ஆட்டத்தில் செல்சியிடம் வீழ்ந்தது. 2-0 என் னும் கோல் கணக்கில் செல்சி தனது சொந்த மண்ணில் சிட்டியை வெற்றிகொண்டது. தன்னிகரில்லாத் தலைவனாக வலம் வந்த சிட்டிக்கு இது ஓர் அதிர்ச்சி தோல்வி. ஆட்டம் தொடங்கியதிலிருந்து சிட்டியின் கோல் முயற்சிகளை செல்சி அணி யினர் லாவகமாகத் தடுத்துக் கொண்டே இருந்தனர்.
குறிப்பாக 31ஆவது நிமிடத்தில் டேவிட் சில்வாவும் அதற்கடுத்த நிமிடத் தில் பெர்னார்டோ சில்வாவும் முன்னெடுத்துச் சென்ற கோல் போடும் வாய்ப்புகளை செல்சி வீரர் கள் குறுக்கே புகுந்து தடுத்தனர்.
பந்தை உதைக்கத் தயாரான மான்செஸ்டர் சிட்டி வீரர் ஃபேபியன் டெஃப் (நடுவில்). அதனைத் தட்டிப் பறிக்க ஓடும் செல்சியின் ஈடென் ஹஸார்ட் (இடது). படம்: இபிஏ

