லண்டன்: காற்பந்துப் போட்டிகள் தொடர்பில் கடந்த பத்து ஆண்டுகளில் 1,260 முறை பந்தயம் கட்டியதாக இங்கிலாந்து காற்பந்து ஆட்டக்காரர் ஜோயி பார்ட்டன், 34, மீது அந்த நாட்டுக் காற்பந்துச் சங்கம் (எஃப்ஏ) குற்றம் சுமத்தியுள்ளது. மான்செஸ்டர் சிட்டி, நியூகாசல் யுனைடெட், குவீன்ஸ்பார்க் ரேஞ்சர்ஸ், பர்ன்லி ஆகிய இபிஎல் குழுக்களைப் பிரதிநிதித்து இருக்கும் பார்ட்டன், கடைசியாக ஸ்காட்லாந்தின் ரேஞ்சர்ஸ் குழுவிற்காக ஆடினார். சூதாட்டக் காரணங்களுக்காக கடந்த நவம்பர் மாதம் அவருக்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டது. அம்மாதத்திலேயே அக்குழுவைவிட்டு வெளியேறிய அவர் வரும் ஜனவரி முதல் மீண்டும் பர்ன்லி குழுவில் இணையவுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஜனவரி 5ஆம் தேதிக்குமுன் பார்ட்டன் பதிலளிக்கவேண்டும்.
1,260 முறை பந்தயம் கட்டியதாக காற்பந்து வீரர் மீது குற்றச்சாட்டு
1 mins read

