கிரிஸ்டல் பேலஸ் காற்பந்துக் குழு நிர்வாகியாக அலர்டைஸ் நியமனம்

கிரிஸ்டல் பேலஸ் காற்பந்துக் குழு நிர்வாகியாக அலர்டைஸ் நியமனம்

1 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான கிரிஸ்டல் பேலஸ் குழுவின் புதிய நிர்வாகியாக சேம் அலர்டைஸ், 62, நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாண்டில் இங்கிலாந்து தேசிய குழுவின் நிர்வாகியாக அலர்டைஸை நியமித்த இங்கிலாந்துக் காற்பந்துச் சங்கம் 67 நாட்களிலேயே அவரிடமிருந்து அந்தப் பொறுப்பைப் பறித்தது. இந்நிலையில், நடப்பு இபிஎல் பருவத்தில் கிரிஸ்டல் பேலஸ் இதுவரை பத்து ஆட்டங்களில் தோற்று பின்தங்கி இருப்பதால் நிர்வாகிப் பதவியிலிருந்து ஆலன் பார்டு நேற்று முன்தினம் நீக்கப் பட்டார். இதையடுத்து, அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அக்குழுவின் நிர்வாகியாகச் செயல்பட சேம் அலர்டைஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.