லண்டன்: இவ்வாண்டில் தமது குழுவான மான்செஸ்டர் சிட்டி எந்த ஒரு பட்டமும் வெல்லாமல் போனால் அக்குழு மோசமானது என்றாகிவிடாது என்று சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார். கார்டியோலா சிட்டியின் நிர்வாகியாக இந்தப் பருவத்தில் இணைந்தார்.
இப்பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக் கான மாபெரும் வெற்றியாளர் பட்டத்தை சிட்டி கைப்பற்றா விட்டால் அதை ஒரு தோல்வியாகக் கருதப்போவதில்லை என்று அவர் கூறினார்.

