புனே: இந்தியா- இங்கிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் புனேயில் இன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தோல் வியைத் தழுவியது. அதனை அடுத்து, கிறிஸ் துமஸ், புத்தாண்டு விடுமுறை களுக்காக இங்கிலாந்து வீரர்கள் சொந்த நாடு திரும்பினர். அதன் பிறகு, இந்தியாவுக்குத் திரும்பவும் வந்துள்ள இங்கிலாந்து அணி இந்தியா 'ஏ' அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் களமிறங்கியது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து வென்றது. இரண் டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வாகை சூடியது.
இந்நிலையில், இன்று புனேயில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இந்திய அணித் தலைவர் பதவியிலிருந்து டோனி விலகி யதை அடுத்து, முதல்முறையாக ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்குகிறது. டோனிக்குப் பதிலாக விராத் கோஹ்லி அணித் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். கோஹ்லியின் தலைமையின் கீழ் டோனி முதல்முறையாக விளையாட இருப்பதும், யுவராஜ் சிங் மீண்டும் அணிக்குத் திரும்பி இருப்பதும் ரசிகர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டியுள்ளது.
ஓட்டங்களைக் குவித்து தங்கள் அணிகளுக்காக வெற்றியைத் தேடி தரும் முனைப்புடன் இருக்கும் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் (இடது) மற்றும் இந்தியாவின் ரகானே (வலது). படம்: ஏஎஃப்பி

