ரியாத்: இத்தாலிய சூப்பர் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஏசி மிலான் வெற்றி பெற்றது.
ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் யுவென்டஸ் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் அது தோற்கடித்தது.
மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் அட்லாண்டா குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் இன்டர் மிலான் வீழ்த்தியது.
ஜனவரி 6ஆம் தேதியன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஏசி மிலானும் இன்டர் மிலானும் மோதுகின்றன.
ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் யுவென்டஸ் கோல் போட்டு முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்தில் மிலான் கோல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது.
ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் அக்குழுவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதை கோலாக்கினார் கிறிஸ்டியன் புலிசிச்.
தொடர்புடைய செய்திகள்
நான்கு நிமிடங்கள் நேரம் கழித்து, மிலானின் இரண்டாவது கோல் புகுந்தது.
இம்முறை யுவென்டசின் தற்காப்பு ஆட்டக்காரர் ஃபெடரிக்கோ கட்டி சொந்த கோல் போட்டார்.
மிலானின் யூனோஸ் மூசா அனுப்பிய பந்து கட்டியின் மீது பட்டு வலைக்குள் புகுந்தது.