உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டி அரங்கில் இந்திய நட்சத்திரங்கள்

1 mins read
57a82cce-6b70-4e11-acba-4230cfe66709
பார்வையாளர்கள் பகுதியில் மோகன்லால். படம்: டுவிட்டர் -
multi-img1 of 2

இந்தியாவில் காற்பந்துக்குப் பெயர் பெற்ற மாநிலங்களுள் கேரளமும் ஒன்று. அம்மாநிலத்தவர்களில் பலரும் அர்ஜென்டினா, பிரேசில் போன்ற முன்னணிக் குழுக்களின் தீவிர ரசிகர்கள்.

அம்மாநிலத் திரையுலகினரும் அதற்கு விதிவிலக்கல்ல. உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடந்த லுசெய்ல் அரங்கில் காணப்பட்ட மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களே அதற்குச் சான்று.

உச்ச நடிகர்களான மோகன்லாலும் மம்மூட்டியும் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து போட்டியைக் கண்டு களித்தனர்.

போட்டி தொடங்குமுன் கிண்ண அறிமுக நிகழ்வில் ஸ்பெயின் அணியின் முன்னாள் தலைவர் கசியசுடன் பங்கேற்றார் நடிகை தீபிகா படுகோன்.