கிரிக்கெட்: பாகிஸ்தானை முதல்முறையாக வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

முகம்மது நபியின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியை முதல்முறையாக டி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியுள்ளது.

இதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டியில் தற்போது ஆப்கானிஸ்தான் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. 

‌‌‌ஷார்ஜாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நடந்த போட்டியில் முதலில் பாகிஸ்தான் பந்தடித்தது.

20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. நபி 12 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தானுக்கு நபி மீண்டும் கைகொடுத்தார். 38 ஓட்டங்கள் எடுத்த நபி, ஆப்கானிஸ்தானை 17.5ஆவது ஓவரில் வெற்றிபெறச் செய்தார்.

பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசம், ஷாகீன் ‌‌‌ஷா அஃப்ரிடி, முகம்மது ரிஸ்வான் போன்ற முன்னணி வீரர்கள் பலர் இத்தொடரில் விளையாடவில்லை. அவர்களுக்கு அவ்வணி நிர்வாகம் ஓய்வு கொடுத்துள்ளது.

 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!