ரொனால்டோ இருந்தும் சவூதி லீக் கிண்ணத்தை தவறவிட்ட அல்-நசர்

1 mins read
fda57e27-ad83-43ac-9839-49f411558bd1
படம்: ராய்ட்டர்ஸ் -

சவூதி புரோ லீக் கிண்ணத்தை அல்-இட்டிஹாட் அணி (69 புள்ளிகள்) 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக வென்றுள்ளது.

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல்-நசர் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் நிலையில் (64 புள்ளிகள்) வந்து கிண்ணத்தைத் தவறவிட்டது.

ரொனால்டோ இப்பருவத்தில் அந்த அணிக்காக எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

கிட்டத்தட்ட ஆண்டிற்கு 288 மில்லியன் டாலர் சம்பளத்தில் அல்-நசர் அணிக்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டார் ரொனால்டோ.

மே 27 அவரது அணி அல-எல்டிஃபாக் அணியுடன் மோதிய ஆட்டம் 1-1 என்று சமநிலையில் முடிந்தது.

அதனால் தமது முதல் சவூதி லீக் பருவத்தில் ரொனால்டோவால் எந்த கிண்ணமும் வெல்ல முடியாமல் போனது.

சவூதி லீக் காற்பந்து அணிகள் உலகின் முன்னனி வீரர்கள் பலரை அதிக சம்பளம் கொடுத்து வாங்கி தமது போட்டியை உலக அளவில் பிரபலப்படுத்த திட்டமிட்டுவருகிறது.

குறிப்புச் சொற்கள்