தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரீபிய பிரிமியர் லீக்கில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்

1 mins read
4ef19565-d98e-42e7-9640-3d93022c3b76
அம்பதி ராயுடு. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

மும்பை: இந்தியா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு கரீபிய பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட்டில் விளையாடவிருக்கிறார்.

செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக ராயுடு விளையாடவுள்ளார் என்று இஎஸ்பின்கிரிக்இன்ஃபோ செய்தி தெரிவிக்கிறது.

முன்னதாக, அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த முதலாவது ‘மேஜர் லீக் கிரிக்கெட்’டிலும் டெக்சஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இதனிடையே, இந்திய அணி வீரர்கள் ஓய்வுபெற்றதும் குறித்த காலத்திற்கு வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்பதைத் தடுப்பது குறித்துச் சிந்தித்து வருவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.

அதுபற்றி இன்னும் இறுதி முடிவு அறிவிக்கப்படாதபோதும், ராயுடு அமெரிக்காவில் நடந்த போட்டித் தொடரிலிருந்து விலகினார்.

பிரவீன் டாம்பேயை அடுத்து கரீபிய லீக்கில் விளையாடப் போகும் இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறவிருக்கிறார் ராயுடு.

குறிப்புச் சொற்கள்