அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா

உலகக் கிண்ணக் காற்பந்து 2026

அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா

1 mins read
c7e8868e-3be8-414e-8fe0-f985deb795c7
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது கோலைப் புகுத்திய உற்சாகத்தில் துள்ளி ஓடினார் அலெக்ஸ் ஃபிரீமன் (நடு). - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் 32 அணிகள் போட்டியிடவிருக்கும் இரண்டாம் சுற்றுக்கு அமெரிக்கா முன்னேறியிருக்கிறது.

சியாட்டல் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ‘டி’ பிரிவு ஆட்டத்தில் அது 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது. ஏற்கெனவே பராகுவே அணியை வீழ்த்தியதால் அமெரிக்கா அடுத்த சுற்றில் அடியெடுத்து வைத்துள்ளது.

ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் கேமரன் பர்ஜஸ் புகுத்திய சொந்த கோலால் முன்னுக்குச் சென்றது அமெரிக்கா.

பின்னர் 43வது நிமிடத்தில் அமெரிக்காவின் அலெக்ஸ் ஃபிரீமன் பந்தைத் தலையால் முட்டி வலைசேர்த்தார்.

‘சி’ பிரிவு ஆட்டமொன்றில் மொரோக்கோ அணி 1-0 எனும் கோல் எண்ணிக்கையில் ஸ்காட்லாந்தை வென்றது.

அதே பிரிவில் பிரேசிலும் ஹைட்டியும் மோதிய மற்றோர் ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் பிரேசில் வெற்றிபெற்றது.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்காற்பந்துபிரேசில்அமெரிக்கா