தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லெவர்குசனின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக எரிக் டென் ஹாக் நியமனம்

1 mins read
299c20fd-b7e3-466e-92b0-7bfeba1264fa
எரிக் டென் ஹாக். - படம்: ஏஎஃப்பி

பெர்லின்: மான்செஸ்டர் யுனைடெட்டின் முன்னாள் நிர்வாகி எரிக் டென் ஹாக் ஜெர்மனியின் பயர் லெவர்குசனின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக திங்கட்கிழமை (மே 26) நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன்பு ஸேபி அலோன்சோ அப்பதவியை வகித்தார்.

அலோன்சோ, ரியால் மட்ரிட்டின் நிர்வாகியாகப் பொறுப்பேற்க இருக்கிறார்.

அவரது தலைமையின்கீழ் லெவர்குசன் முதல்முறையாக 2023-24 பருவத்தில் ஜெர்மன் காற்பந்து லீக் போட்டி பட்டத்தைக் கைப்பற்றியது.

அதே பருவத்தில் ஜெர்மன் கிண்ணக் காற்பந்துப் போட்டியிலும் அக்குழு வாகை சூடியது.

ஆனால் இப்பருவத்தில் லீக் பட்டியலில் லெவர்குசன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

முதலிடத்தை பயர்ன் மியூனிக் பிடித்தது.

இருப்பினும், சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்கு லெவர்குசன் தகுதி பெற்றுள்ளது.

டென் ஹாக் இதற்கு முன்பு 2013லிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பயர்னின் மாற்று ஆட்டக்காரர்கள் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்