வெலன்சியாவின் தலைவராக பீட்டர் லிம்மின் மகன் நியமனம்

1 mins read
d2770067-71ab-4d0f-94a5-16c77bccb4e8
வெலன்சியா காற்பந்துக் குழுவின் தலைவராக சிங்கப்பூர் பெருஞ்செல்வந்தர் பீட்டர் லிம்மின் (இடது) ஒரே மகனான 31 வயது கியட் லிம் மார்ச் 5ஆம் தேதி பொறுப்பேற்கிறார். - படங்கள்: வெலன்சியா காற்பந்துக் குழு

ஸ்பானிய லீக் காற்பந்துப் போட்டியில் போட்டியிடும் வெலன்சியா குழுவின் தலைவராக சிங்கப்பூர் பெருஞ்செல்வந்தர் பீட்டர் லிம்மின் ஒரே மகனான கியட் லிம் புதன்கிழமை (மார்ச் 5) நியமிக்கப்பட இருக்கிறார்.

தற்போது அக்குழுவின் தலைவராக சான் லே ஹூன் பதவி வகிக்கிறார்.

“திரு கியட் லிம்மிடம் தலைமைத்துவத்தை ஒப்படைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் குழுவின் முக்கிய பங்குதாரரின் மகன். வெலன்சியா காற்பந்துக் குழு மீதும் அதன் எதிர்காலம் குறித்தும் திரு பீட்டர் லிம் கடப்பாடு கொண்டிருப்பதை இந்த நியமனம் பிரதிபலிக்கிறது,” என்று சான் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டிலிருந்து வெலன்சியா குழுவின் இயக்குநராக 31 வயது கியட் லிம் இருந்து வருகிறார்.

வெலன்சியா குழு இப்பருவத்தில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குச் செயல்படவில்லை.

அடுத்த பருவத்தில் அது இரண்டாம் நிலை லீக்கிற்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது.

எனவே, வெலன்சியாவில் தமக்கு இருக்கும் பங்குகளை விற்க இருப்பதாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், அவரது மகன் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்