ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக களமிறங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.
இதன்மூலம், ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் தந்தை-மகன் என்ற பெருமையை அவர்கள் பெற்றனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) மாலை மும்பையில் நடந்துவரும் போட்டியில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் இடம்பிடித்தார்.
முதலில் பந்துவீசிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் ஓவரையும் அர்ஜுனே வீசினார். அதில் அவர் 4 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.
இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுனை மும்பை அணி 2022ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.
உடல்நலம் சரியில்லாத காரணத்தால் ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் மும்பை அணியை வழிநடத்துகிறார்.