சோதனையான சாதனையை சமன் செய்த சச்சினின் மகன்

1 mins read
e2813bce-86b7-4749-b7d5-f2497dfb5235
படம்: டுவிட்டர்/ ஐபிஎல் -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு சோதனையான சாதனையை செய்துள்ளார்.

தற்போது அர்ஜுன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடிவருகிறார்.

முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பாகப் பந்து வீசிய அர்ஜுன் பலரின் பாராட்டுக்களைப் பெற்றார்.

ஆனால் சனிக்கிழமை (ஏப்ரல் 22) இரவு பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் மோசமாக விளையாடினார்.

முதல் இரண்டு ஓவர்களில் துல்லியமாக பந்து வீசிய அர்ஜுன் மூன்றாவது ஓவரில் 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

ஆட்டத்தின் 16ஆவது ஓவரில் அது நடந்தது. ஆட்டத்தின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது அந்த ஓவர்.

இந்த ஐபிஎல் பருவத்தில் ஒரே ஓவரில் ஆக அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் பட்டியலில் குஜராத் அணியின் யா‌ஷ் தயாலுடன் அர்ஜுனும் சேர்ந்துகொண்டார்.

யா‌ஷ் தயால் கோல்கத்தா அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

முதலில் பந்தடித்த பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ஓட்டங்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 201 மட்டுமே எடுத்து 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

குறிப்புச் சொற்கள்