எஃப்ஏ கிண்ண மூன்றாம் சுற்று ஆட்டத்தில் ஆர்சனல், மேன்யூ மோதல்

1 mins read
90bda231-7a49-4f07-9a86-b5d3118ced9c
மைக்கேல் ஆர்டெட்டாவின் (இடது) ஆர்சனல் குழு, எஃப்ஏ கிண்ண மூன்றாம் சுற்றில் ரூபன் அமோரிமினின் மேன்யூ குழுவை எதிர்கொள்கிறது. - படங்கள்: ஸ்கை ஸ்போர்ட்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணத்தின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் யுனைடெட் (மேன்யூ) குழு ஜனவரி மாதம் எஃப்ஏ கிண்ண மூன்றாம் சுற்றில் ஓர் அதிரடியான மோதலை எதிர்நோக்கவுள்ளது.

இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணத்தை ஆர்சனல் 14 முறை வென்றிருக்கிறது. அதே நேரத்தில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் மற்றும் செல்சி அனைத்தும் நான்காம் பிரிவு குழுக்களுடன் மோதவுள்ளன.

இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணத்தை 13 முறை வென்றுள்ள மேன்யூ, டிசம்பர் 4ஆம் தேதி, இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஆர்சனல் குழுவை அதன் சொந்த அரங்கில் சந்திக்கிறது. ஒரு மாதம் கழித்து எஃப்ஏ கிண்ண ஆட்டம் நடைபெறும்.

மூன்றாம் சுற்று ஆட்டங்கள் ஜனவரி 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்