தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் விளையாடும் ஆர்சனல், நியூகாசல், ஏசி மிலான் குழுக்கள்

1 mins read
31f48238-1a2d-474c-b18b-9b1c621dd9fc
பான் பசிபிக் ஹோட்டலில் நடந்த தங்கள் குழுக்களின் சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் காற்பந்து நட்சத்திரங்கள் (இடமிருந்து) பக்காரி சன்யா (ஆர்சனல்), செர்ஜின்யோ (ஏசி மிலான்), ஷே கிவன் (நியூகாசல் யுனைடெட்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் டிஇஜி ஸ்போர்ட்சும் (TEG Sport) இணைந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குச் செயல்படவுள்ளன.

அதில் மூன்று ஆண்டுகள் (2025, 2027 and 2029) முன்னணி ஐரோப்பியக் காற்பந்துக் குழுக்கள் சிங்கப்பூரில் நட்புமுறையிலான ஆட்டங்களில் விளையாடும்.

2025ஆம் ஆண்டுக்கான நட்புமுறை ஆட்டங்களில் கலந்துகொள்ள ஆர்சனல், நியூகாசல் யுனைடெட், ஏசி மிலான் ஆகிய குழுக்கள் சிங்கப்பூருக்கு வருகின்றன.

ஜூலை 23ஆம் தேதி நடக்கும் ஆட்டத்தில் ஆர்சனல் குழு, ஏசி மிலான் குழுவை எதிர்கொள்ளும்.

ஜூலை 27ஆம் தேதி நியூகாசல் - ஆர்சனல் குழுக்கள் மோதவுள்ளன.

ஆட்டம் தேசிய விளையாட்டரங்கில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பியக் காற்பந்துக் குழுக்களுக்குத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்குமுன் சிங்கப்பூரில் ஐரோப்பியக் குழுக்கள் விளையாடியபோது சிங்கப்பூர் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்ததை ஏற்பாட்டாளர்கள் நினைவுகூர்ந்தனர்.

இதற்கு முன்னர் சிங்கப்பூருக்கு ஆர்சனல் குழு 2018ஆம் ஆண்டு வந்தது. நியூகாசல் 1996ஆம் ஆண்டு வந்தது. ஏசி மிலான் முதல்முறையாகச் சிங்கப்பூரில் விளையாடவுள்ளது.

இவ்வாண்டு ஆட்டங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் ஏப்ரல் 25ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் விற்கப்படும்.

நுழைவுச்சீட்டுகளுக்கான முன்பதிவுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை Ticketek இணையப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று ஏற்பாட்டு குழு தெரிவித்தது.

செய்தி: வினோத் கருப்பையா

குறிப்புச் சொற்கள்