மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட்டும் ஆர்சனலும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் புதிய பருவத்துக்கான அவற்றின் முதல் ஆட்டத்தில் களமிறங்கின.
இந்த ஆட்டம் யுனைடெட்டின் ஓல்டு டிராஃபர்ட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெற்றது.
இதில் ஆர்சனல் 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
புதிய பருவத்தைத் தோல்வியுடன் யுனைடெட் தொடங்கியிருப்பது அதன் ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆட்டத்தின் ஒற்றை கோலை ஆர்சனலின் ரிக்கார்டோ கலாஃபியோரி போட்டார்.
மான்செஸ்டர் யுனைடெட்டின் மாற்று கோல்காப்பாளரான அல்டோ பயின்டிர் செய்த பிழையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பந்தை வலைக்குள் அனுப்பினார் கலாஃபியோரி.
ஆர்சனலைவிட யுனைடெட் பந்தை அதிக நேரம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
மேலும், கோல் வலையை நோக்கி அது 22 முறை பந்தை அனுப்பியது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், இறுதி வரை அக்குழுவால் கோல் போட முடியாமல் போனது.