தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெஸ்ட் ஹேம் அணியை புரட்டியெடுத்த ஆர்சனல்

1 mins read
fd5416b3-e008-4c33-acb0-48022c7dfa65
வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுக்கு எதிரான அபார வெற்றியைக் கொண்டாடும் ஆர்சனல் வீரர்கள். - படம்: ராய்டட்ர்ஸ்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை 5-2 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது ஆர்சனல்.

சனிக்கிழமை (நவம்பர் 30) வெஸ்ட் ஹேமின் லண்டன் விளையாட்டரங்கில் நடந்த ஆட்டத்தின் அனைத்து கோல்களும் முற்பாதியில் விழுந்தன.

ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் ஆர்சனலை முன்னுக்கு அனுப்பினார் கேப்ரியல். 26வது நிமிடத்தில் லியாண்ட்ரோ ட்ரொசார்ட் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார். பின்னர் ஆர்சனலுக்கு மார்ட்டின் ஓடகார்ட், கய் ஹாவர்ட்ஸ் இருவரும் கோல் போட்டனர்.

கோல் எண்ணிக்கை 4-0 ஆனதைத் தொடர்ந்து வெஸ்ட் ஹேம் ரசிகர்கள் பலர் அரங்கிலிருந்து வெளியேறத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆர்சனலின் நான்காவது கோல் விழுந்து சில நிமிடங்களிலேயே வெஸ்ட் ஹேம் இரண்டு கோல்களைப் போட்டது.

எனினும், முற்பாதியாட்டத்தின் கூடுதல் நேரத்தில் புக்காயோ சாக்கா ஆர்சனலின் ஐந்தாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதிப்படுத்தினார். ஓடகார்ட், சாக்காவின் கோல்கள் பெனால்டி வாய்ப்புகளில் விழுந்தன.

தொடர்ந்து இரண்டாவது பருவமாக ஆர்சனல், வெஸ்ட் ஹேமை அதன் சொந்த மண்ணில் துவைத்தெடுத்திருக்கிறது. சென்ற ஆண்டு இதே ஆட்டத்தில் 6-0 எனும் கோல் கணக்கில் வென்றது ஆர்சனல்.

குறிப்புச் சொற்கள்