ஆர்சனல், மான்செஸ்டர் யுனைடெட் அடுத்த சுற்றுக்கு தகுதி

ஆர்சனல், மான்செஸ்டர் யுனைடெட் அடுத்த சுற்றுக்கு தகுதி

1 mins read
bcd98737-f9bd-4f7a-be54-adb6b2fc7fef
ஆட்டத்தின் வெற்றி கோலை 87வது நிமிடத்தில் அடித்தார் ஆர்சனலின் நட்சத்திரம் ஓபாமாயாங் (இடது). படம்: ஏஃப்பி -

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களில் மான்செஸ்டர் சிட்டி போல தொடர் வெற்றிகளை குவிப்பதற்கு சிரமங்களை எதிர்கொண்டாலும், ஐரோப்பிய ஆட்டங்களில் மற்ற இங்கி‌லி‌ஷ் குழுக்கள் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றன.

ஐரோப்பா லீக் ஆட்டங்களில் நேற்று ஆர்சனல் குழுவும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் தங்களது ஆட்டங்களை வென்று 'ரவுண்ட் ஒஃப் 16' சுற்றுக்கு முன்னேறின.

ஆர்சனல் குழு 2-1 என்ற கோல் கணக்கில் பெஃபீகா குழுவிடம் தோல்வி அடைவதாக இருந்த நிலையில் ஆர்சனலின் கீரன் தியர்னியும் முன்னணி ஆட்டக்காரர் ஓபாமாயாங்கும் தலா ஒரு கோல் அடுத்து வெற்றியை கைப்பற்றினர்.

மற்றொரு ஆட்டத்தில், மான்செஸ்டர் யுனைடெட் ஸ்பானிய குழுவான ரியால் சோ‌ஷிடெட் குழுவுடன் கோல் எதுவுமின்றி சம நிலை கண்டது.

இக்குழுக்களிடையே நடந்த முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் ஏற்கெனவே 4 கோல்கள் புகுத்தியிருந்ததால் அடுத்த சுற்றுக்கு யுனைடெட் முன்னேறியது.

இங்கிலி‌ஷ் காற்பந்து லீக் பட்டியலில் மூன்றாம் இடம் வகிக்கும் லெஸ்டர் சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் செக் நாட்டு குழுவான சலாவியா பிராக் குழுவிடம் தோல்வியை தழுவியது.

இத்தோல்வியினால் அது ஐரோப்பா லீக் போட்டியிலிருந்து விலகியது.