லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் குழுவை 5-1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வீழ்த்தியது.
இந்த ஆட்டம் பேலஸ் குழுவின் செல்ஹர்ஸ்ட் பார்க் விளையாட்டரங்கில் டிசம்பர் 21ஆம் தேதியன்று நடைபெற்றது.
ஆர்சனலுக்காக அதன் பிரேசிலிய வீரர் கேப்ரியல் ஜேசுஸ் இரண்டு கோல்களைப் போட்டார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற லீக் கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்திலும் பேலசை ஆர்சனல் தோற்கடித்தது.
அந்த ஆட்டத்தை 3-2 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் கைப்பற்றியது.
கேசுஸ் மூன்று கோல்கள் போட்டு பேலசின் லீக் கிண்ணப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இந்நிலையில், டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்திலும் ஜேசுசின் அதிரடி ஆட்டம் பேலசை கதிகலங்க வைத்தது.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சனல் 33 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பேலஸ் 15 புள்ளிகள் பெற்று 17வது இடத்தில் உள்ளது.

