தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அஸ்வின் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை

1 mins read
e329c98f-b008-4fc3-b376-b3397fea4182
400 விக்கெட் வீழ்த்திய சாதனையை புரிந்த நான்காவது இந்திய வீரராக அஸ்வின் திகழ்கிறார். படம்: பிசிசிஐ -

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தப் போட்டியின் 30 விக்கெட்டுகளில் 28 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி போட்டியை இரண்டு நாட்களில் முடிய முக்கிய காரணமாக இருந்தனர்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

2வது இன்னிங்சில் ஜாஃப்ரா ஆர்சரை வீழ்த்தியபோது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்திய சாதனையை அஸ்வின் புரிந்தார்.