தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய அணியில் மீண்டும் அஸ்வின்

1 mins read
344cf4ca-bcee-43e1-b544-32e1e8eb38cd
ஆர் அஸ்வின். - கோப்புப்படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு உள்ளது. சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

முதலிரு போட்டிகளில் கே எல் ராகுல் இந்திய அணியை வழிநடத்துவார்.

முதலிரு போட்டிகளுக்கான இந்திய அணி: கே எல் ராகுல் (தலைவர்), ரவீந்திர ஜடேஜா (துணைத்தலைவர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷா கிஷன், ஷார்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

குறிப்புச் சொற்கள்