தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கும்ளேவை முந்திய அஸ்வின்

1 mins read
5aa565e1-ca7c-437a-aa47-8e3f5893e986
படம்: ஏஎஃப்பி -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் இன்று (மார்ச் 10) புது சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் ஆட்டங்களில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் அவர்.

அகமதாபாத்தில் நடந்து வரும் நான்காவது ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் ஆட்டங்களில் அவர் வீத்திய விக்கெட்டுகள் எண்ணிக்கை 113 விக்கெட்டுகளாக உயர்ந்தது.

இதற்கு முன்னர் அனில் கும்ளே 111 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார்.

மேலும் பார்டர் கவாஸ்கர் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனுடன் அஸ்வினும் பகிர்ந்து கொண்டார்.

இருவரும் பார்டர் கவாஸ்கர் கிண்ணத் தொடரில் 113 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்