தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியக் கிண்ணம் 2025: போலி நுழைவுச்சீட்டுகள் குறித்து எச்சரிக்கை

1 mins read
98e8cfc2-794e-4d2b-977a-4c84e2be0ce7
போலி நுழைவுச்சீட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாமென ஆசிய கிரிக்கெட் மன்றம் அறிவுறுத்தியுள்ளது. - படம்: ஆசிய கிரிக்கெட் மன்றம் / எக்ஸ்

துபாய்: அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஆசியக் கிண்ணம் 2025 கிரிக்கெட் போட்டிகளுக்கான போலி நுழைவுச்சீட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என்று ஆசிய கிரிக்கெட் மன்றம் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எட்டு நாடுகள் இரு பிரிவுகளாகப் பங்குகொள்ளும் ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 8ஆம் தேதி ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) தொடங்கவுள்ளன.

இந்நிலையில், அப்போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்னும் தொடங்கவில்லை என்றும் இப்போதைக்கு அப்படி ஏதேனும் நுழைவுச்சீட்டுகள் இணையம் வழியாக விற்கப்பட்டால் அவை போலியானவை என்றும் ஆசிய கிரிக்கெட் மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

போலி நுழைவுச்சீட்டுகளை வாங்கியோர் விளையாட்டரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

அதிகாரத்துவ நுழைவுச்சீட்டு விற்பனை குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆசிய கிரிக்கெட் மன்றமும் யுஏஇ கிரிக்கெட் சங்கமும் தெரிவித்துள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், ஓமான், யுஏஇ ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும் ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்ளாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும்.

இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (தலைவர்), ஷுப்மன் கில் (துணைத் தலைவர்), அபிஷேக் சர்மா, ஹார்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ஜஸ்பிரீத் பும்ரா, ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, திலக் வர்மா, ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ்.

குறிப்புச் சொற்கள்