தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

48 பந்துகளில் ஜெய்ஸ்வால் சதம்; அரையிறுதிச் சுற்றில் இந்தியா

1 mins read
74ac6f11-7db8-4f83-a9bc-564d5dc99503
நேப்பாளத்திற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் சதமடித்த இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். - படம்: ஏஎஃப்பி

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

நேப்பாள அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்திய அணி 23 ஓட்டங்களில் வெற்றிபெற்றது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி முதலில் பந்தடித்தது. தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் நூறு ஓட்டங்களை விளாசினார். கடைசி நேரத்தில் ரிங்கு சிங் 15 பந்துகளில் 37 ஓட்டங்களைக் குவித்தார்.

இதனையடுத்து, இந்திய அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களைச் சேர்த்தது.

அதன்பின் பந்தடித்த நேப்பாளம் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தோற்றது. இந்தியத் தரப்பில் ஆவேஷ் கானும் ரவி பிஷ்னோயும் ஆளுக்கு மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

இந்திய அணி வரும் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள அரையிறுதியில் பங்ளாதேஷ் அல்லது மலேசியாவை எதிர்த்தாடும்.

குறிப்புச் சொற்கள்