மட்ரிட்: ஸ்பானிய அரசர் கிண்ணக் காற்பந்தில் அட்லெட்டிகோ மட்ரிட் குழு 4-2 என்ற கோல் கணக்கில் வலுமிக்க ரியால் மட்ரிட் குழுவைத் தோற்கடித்து, காலிறுதிக்கு முன்னேறியது.
ஆட்ட நேரமான 90 நிமிடங்கள் முடிவில் இரு குழுக்களும் தலா இரு கோல்களை அடித்து 2-2 எனச் சமநிலையில் இருந்தன. இதனையடுத்து, ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.
அதில் ஆன்டுவான் கிரீஸ்மனும் ரோட்ரிகோ ரிகெல்மியும் ஆளுக்கு ஒரு கோலடித்து, அட்லெட்டிகோ குழுவிற்கு வெற்றி தேடித் தந்தனர்.
கடந்த வார இறுதியில் இவ்விரு குழுக்களும் மோதிய ஸ்பானிய சூப்பர் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் ரியால் 5-3 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோவை வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டம் சவூதி அரேபியாவில் நடைபெற்றது.