இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதுடெல்லியில் தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்தடிக்கத் தொடங்கியது.
இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முதல் ஆட்டத்தை எளிதாக வென்ற இந்திய அணி இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு ஆட்டம் கொண்ட பார்டர் காவஸ்கர் தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

