கிங்ஸ்டவுன்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
ஆப்கானிஸ்தான், இந்திய அணிகளுடன் சூப்பர் 8 சுற்றில் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் ஆஸ்திரேலியாவின் வாய்ப்பு பறிபோனது.
திங்கட்கிழமை (ஜூன் 25) இரவு நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதின.
முதலில் பந்தடித்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்கள் எடுத்தது. அணித் தலைவர் ரோகித் சர்மா 92 ஓட்டங்கள் எடுத்தார்.
சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் சிறப்பான துவக்கம் தந்தார். அவர் 76 ஓட்டங்கள் விளாசினார். இருப்பினும் மற்றவர்கள் சரியாக விளையாடவில்லை.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்கள் மட்டுமே ஆஸ்திரேலியா எடுத்தது. 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜூன் 27 நடக்கும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை சந்திக்கிறது.