பிரிட்ஜ்டவுன்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, நடப்பு வெற்றியாளர் இங்கிலாந்து அணியை 36 ஓட்டங்களில் வீழ்த்தியது.
முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ஓட்டங்கள் குவித்தது ஆஸ்திரேலியா.
சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பந்தடிப்பாளர்கள் சரியாக ஓட்டங்கள் குவிக்கவில்லை. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது.
ஆட்டத்தை ஆஸ்திரேலியா பக்கம் திருப்பிய ஆடம் ஸாம்பா ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தத் தோல்வியால் இங்கிலாந்து அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. இனி வரும் ஆட்டங்களில் அது சிறப்பாக விளையாடி புள்ளிகள் குவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.