தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து

1 mins read
982d50cf-7302-4764-936b-dd73c510fb65
18 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் சிக்கல்களை எதிர்நோக்கி வந்த இங்கிலாந்து அணி தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சனிக்கிழமை நள்ளிரவுக்கு பின் இங்கிலாந்து அணி நமீபியாவுடன் விளையாடிய ஆட்டத்தில் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆட்டத்தில் அவ்வப்போது மழை குறுக்கிட்டதால் 10 ஓவர் ஆட்டமாக மாற்றப்பட்டது. முதலில் பந்தடித்த இங்கிலாந்து 10 ஓவரில் 122 ஓட்டங்கள் எடுத்தது.

எதிர்பாராதவிதமாக மழை பெய்ததால் நமீபியாவுக்கு ‘டிஎல்எஸ்’ முறையில் 126 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை விரட்டிய நமீபியா 10 ஓவர்களில் 84 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றன.

இதற்கிடையே இந்தியா-கனடா ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆடுகளம் மழை நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றில் விளையாடுகின்றன. நெதர்லாந்து அல்லது பங்ளாதே‌ஷ் கடைசி இடத்திற்கு போராடுகின்றன.

நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறவில்லை.

குறிப்புச் சொற்கள்